கஞ்சா வைத்திருந்த 3 பேர் சிக்கினர்
நல்லம்பள்ளி அருகே கஞ்சா வைத்திருந்த 3 பேர் சிக்கினர்.
நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி அருகே மாதேமங்கலம் பகுதியில் அதியமான்கோட்டை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள மாரியம்மன் கோவில் அருகே நின்று இருந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் மாதேமங்கலம் பகுதியை சேர்ந்த ராமன் (வயது24), லட்சுமணன் (24), செந்தமிழ்செல்வன் (23) என்பதும், கஞ்சா வைத்து இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து கஞ்சா சிகரெட்டுகள், கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire