தி.மு.க. தெருமுனை பிரசார கூட்டம்


தி.மு.க. தெருமுனை பிரசார கூட்டம்
x

தி.மு.க. தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது.

தென்காசி

செங்கோட்டை:

தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம், செங்கோட்டை கே.சி.ரோடு மேலூர் அரசு உயர்நிலைப்பள்ளி முன்பு நடந்தது. தி.மு.க. நகர செயலாளா் ரஹீம் தலைமை தாங்கினார். மாவட்ட பிரதிநிதி கல்யாணி, நகர துணை செயலாளா் குட்டிராஜா, இளைஞரணி அமைப்பாளா் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனா். இளைஞரணி துணை அமைப்பாளரும், நகர்மன்ற உறுப்பினருமான இசக்கித்துரை பாண்டியன் வரவேற்று பேசினார்.

தென்காசி வடக்கு மாவட்ட செயலாளா் செல்லத்துரை, கழக பேச்சாளா்கள் செங்கை குற்றாலிங்கம், ஆயிரப்பேரி முத்துவேல், தலைமை பேச்சாளா் ரம்ஜான்பேகம் ஆகியோர் சிறப்புரையாற்றினா். நகர துணை செயலாளா் ஜோதிமணி, நகர இளைஞரணி ராஜா முகம்மது, மகளிரணி நிர்வாகிகள் மேரி அந்தோணிராஜ், மல்லிகா, வார்டு நிர்வாகிகள் நீராத்து லிங்கபாண்டியன், பெர்னாட்ஷா, வேலுமணி, நாட்டாமை ஆறுமுகம், கருப்பசாமி, கோபால், ஆனந்த், மாடசாமி, வேல்சாமி, மோகன், பூக்கடைமணி, கோவிந்தன் மற்றும் பலா் கலந்து கொண்டனா். நகர பொருளாளா் ஜெயராஜ் நன்றி கூறினார்.


Next Story