#லைவ் அப்டேட்ஸ்: சென்னையில் நாளை பொதுக்குழு கூட்டம் நல்ல முறையில் நடைபெறும் - ஈபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்


x
தினத்தந்தி 22 Jun 2022 9:13 AM IST (Updated: 22 Jun 2022 9:50 PM IST)
t-max-icont-min-icon

பெரும்பான்மையான அதிமுக மாவட்ட செயலாளர்கள் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Live Updates

  • 22 Jun 2022 10:13 AM IST


    ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கோரிக்கையை நிராகரித்தது காவல்துறை

    அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு அனுமதி தரக்கூடாது என ஆவடி காவல் ஆணையரகத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு நேற்று அளித்த கோரிக்கை மனுவை காவல்துறை நிராகரித்துள்ளது. 

  • 22 Jun 2022 10:05 AM IST



  • 22 Jun 2022 10:04 AM IST



  • 22 Jun 2022 9:21 AM IST



  • 22 Jun 2022 9:20 AM IST



  • 22 Jun 2022 9:19 AM IST



  • 22 Jun 2022 9:18 AM IST


    அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நாளை சென்னை வானகரத்தில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற உள்ளது பொதுக்குழுவை தள்ளி வைக்க வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பு வலியுறுத்தி வருகிறது. ஆனால், அதற்கு வாய்ப்பே இல்லை என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு தெரிவித்துள்ளது.

    இதனால், அதிமுகவில் உச்ச கட்ட பரபரப்பு நிலவுகிறது. இந்த நிலையில் அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தேர்தல் ஆணையத்தில் இன்று முறையீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆதரவாளர்கள் உடனான தீவிர ஆலோசனைக்கு பின் தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்க ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .

  • 22 Jun 2022 9:17 AM IST


    அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கேட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த மனு இன்று (புதன்கிழமை) ஐகோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது.

    சென்னை ஐகோர்ட்டில், திருச்செந்தூரை சேர்ந்த வக்கீல் ராம்குமார் ஆதித்தன், முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமியின் மகன் சுரேன் பழனிச்சாமி ஆகியோர் தனித்தனியாக தாக்கல் செய்த வழக்குகளில், “அ.தி.மு.க., அடிப்படை உறுப்பினராக உள்ளோம். ஜெயலலிதா மறைவுக்கு பின், அ.தி.மு.க., சட்ட விதிகளுக்கு எதிராக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது. பொதுச்செயலாளரின் அதிகாரங்களை இந்த இரு பதவிகளுக்கும் வழங்கி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த அ.தி.மு.க. உள்கட்சி தேர்தலை ரத்து செய்ய வேண்டும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் புதிய நியமனங்கள் மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும்” என்று கூறி இருந்தனர்.

    தடை வேண்டும்

    இந்த வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், இவர்கள் இருவரும் சேர்ந்து சென்னை ஐகோர்ட்டில் புதிதாக கூடுதல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். அதில், “பொதுக்குழு, செயற்குழு கூட்டங்களை கூட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு தடை விதிக்க வேண்டும். கட்சி விதிகள்படி நிர்வாக ரீதியாக பொதுச்செயலாளருக்கு மட்டுமே இந்த கூட்டங்களை கூட்ட அதிகாரம் உள்ளது.

    அதுமட்டுமல்லாமல், பொதுக்குழு மற்றும் செயற்குழுவை கூட்டுதல், கட்சி ஆட்சிமன்ற குழு அமைத்தல், உள்கட்சி தேர்தலை நடத்த அறிவிப்பு வெளியிடுதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோருக்கு தடை விதிக்க வேண்டும்” என்பது உள்பட பல கோரிக்கைகளை முன்வைத்து இருந்தனர்.

    இன்று விசாரணை

    இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் தரப்பில் வக்கீல் என்.ஜி.ஆர்.பிரசாத் ஆஜராகி, இந்த வழக்கில் கூடுதல் மனுக்களை தாக்கல் செய்ய உள்ளதால், வழக்கை 22-ந் தேதி (இன்று) விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

    இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கை இன்று விசாரிப்பதாக உத்தரவிட்டார்.

    ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் பொதுக்குழுவுக்கு தடை கோரி ஏற்கனவே 2 வழக்குகள் தொடரப்பட்டு அது மீதான விசாரணை சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் நடந்து வருவது நினைவுகூரத்தக்கது.

  • 22 Jun 2022 9:16 AM IST


    அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் புயலை கிளப்பி இருக்கிறது. ஒற்றை தலைமை விவகாரத்தில் கடும் அதிருப்தியில் உள்ள அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், தொடர்ந்து தனது ஆதரவாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். அவரை சமாதானப்படுத்த அக்கட்சி முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்திருக்கிறது.

    இந்தநிலையில் திட்டமிட்டபடி அ.தி.மு.க. பொதுக்குழு 23-ந்தேதி (நாளை) நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பினர் உறுதியாக கூறிவருகிறார்கள். அதேவேளை சென்னையை அடுத்த வானகரத்தில் பொதுக்குழு கூட்ட ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனால் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கி வருகிறது.

    பொதுக்குழுவை புறக்கணிக்க முடிவு

    இதனால் ஓ.பன்னீர்செல்வம் கடும் அதிருப்தியில் இருக்கிறார். இதனால் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை புறக்கணிக்கவும் அவர் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதையொட்டி சட்ட வல்லுனர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் நேற்று தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார்.

    அதேவேளை அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட அவரது தம்பி ஓ.ராஜா நேற்று ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசினார். மேலும் அவரது ஆதரவாளர்களும் நேற்று இரவு நீண்டநேரம் ஆலோசனையில் பங்கேற்றனர். இதனால் ஓ.பன்னீர்செல்வத்தின் அடுத்தக்கட்ட நிலைப்பாடு என்னவாக இருக்கும்? என்பது குறித்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்தில் காத்திருக்கும் அவரது ஆதரவாளர்களும், ‘ஓ.பன்னீர்செல்வம் என்ன நிலைப்பாட்டை எடுக்கிறாரோ, அதனை பின்பற்ற தயார்’ என்று கூறி வருகிறார்கள். ‘பொதுக்குழு கூட்டத்தை ஓ.பன்னீர்செல்வம் புறக்கணித்தால் நாங்களும் புறக்கணிப்போம். பிறகு அவரது முடிவை ஏற்போம்’ என்று கூறி வருகிறார்கள்.

    பரபரப்பை ஏற்படுத்திய போஸ்டர்

    இதற்கிடையில் ஓ.பன்னீர்செல்வம் வீட்டின் முன்பாக நேற்று அவரது ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில், ‘எம்.ஜி.ஆர். வகுத்த சட்டவிதிகளின்படி தொண்டர்களே கட்சி தலைமையை தேர்வு செய்யவேண்டும். இதனை தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி மாற்ற நினைக்கும் தீயசக்திகளுக்கு கண்டனம் தெரிவித்துக்கொள்கிறோம். எங்கள் உரிமையை பறிக்கும் பொதுக்குழுவுக்கு தமிழகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான அ.தி.மு.க. உண்மை தொண்டர்கள் படையெடுப்போம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கட்சி விதிகள் குறிப்பிட்டுள்ளதோடு, அந்த போஸ்டரின் நிறைவில் எம்.ஜி.ஆரின் கையெழுத்தும் இருக்கிறது. இது பரபரப்பை ஏற்படுத்தியது.

    அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நாளை நடைபெறவுள்ள நிலையில் இன்று (புதன்கிழமை) ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் இருந்து சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • 22 Jun 2022 9:15 AM IST


    ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நாளை (வியாழக்கிழமை) சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    அ.தி.மு.க.வில் விரிசலை ஏற்படுத்தி இருக்கும் ஒற்றை தலைமை விவகாரத்தில் அதிருப்தியில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் கடந்த 20-ந்தேதி எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அதில், ‘இப்போதுள்ள அசாதாரண சூழலை கருதி 23-ந்தேதி (நாளை) நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தை தள்ளிவைக்க வேண்டும்’ என்று வலியுறுத்தி இருந்தார்.

    இந்தநிலையில் இதற்கு பதில் அளித்து ஓ.பன்னீர்செல்வத்துக்கு, எடப்பாடி பழனிசாமி பதில் கடிதம் எழுதி இருந்தார். இந்த கடிதம் ஓ.பன்னீர்செல்வம் எழுதியது போலவே 3 பக்கங்களை கொண்டதாகும். இந்த கடிதம் உடனடியாக கோர்ட்டிலும் தாக்கல் செய்யப்பட்டது. இதனால் கடிதத்தில் உள்ள தகவல் குறித்து ரகசியமாக வைக்கப்பட்டிருக்கிறது. இந்த கடிதத்தில் அ.தி.மு.க. பொதுக்குழுவை திட்டமிட்டபடி நடத்தவேண்டும் என்பதை எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியிருப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story