வெறிநோய் தடுப்பூசி முகாம்
தேன்கனிக்கோட்டையில் வெறிநோய் தடுப்பூசி முகாம் நடந்தது.
கிருஷ்ணகிரி
தேன்கனிக்கோட்டை
தேன்கனிக்கோட்டையில் கால்நடை பாரமரிப்புதுறை சார்பில் இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் மற்றும் வெறிநோய் தடுப்பு குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமை கால்நடை பராமரிப்புதுறை உதவி இயக்குனர் இளவரசன் தொடங்கி வைத்தார். உதவி பேராசிரியர் டாக்டர் இன்பவேலவன், டாக்டர் சாந்திபிரியா, கால்நடை பராமரிப்புதுறை டாக்டர்கள், உதவியாளர்கள் வீடுகளில் வளர்க்கும் நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தினர். முகாமில் துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி, செயல் அலுவலகர் மனோகரன், பேரூராட்சி துணைத்தலைவர் அப்துல்கலாம், கவுன்சிலர் முஜாமில்பாஷா உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வெறிநோய் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
Related Tags :
Next Story