வெறிநோய் தடுப்பூசி முகாம்
வெறி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
திருப்பத்தூர்,
கல்லல் முருகப்பா மேல்நிலைப்பள்ளி எதிரில் உள்ள மைதானத்தில் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வெறி நோய் தடுப்பு பற்றிய விழிப்புணர்வு மற்றும் இலவச வெறி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.முகாமிற்கு கல்லல் ஊராட்சி மன்ற தலைவர் நாச்சியப்பன் தலைமை தாங்கினார். கல்லல் ஒன்றிய தலைவர் சொர்ணம் அசோகன் முகாமை தொடங்கி வைத்தார்.
இம்முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசி மற்றும் குடற்புழு நீக்க சிகிச்சை அளிக்கப்பட்டது. இம்முகாமில் காரைக்குடி கோட்ட கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் டாக்டர் பாலசுப்பிரமணியம், கால்நடை உதவி மருத்துவர்கள், தீபன், லட்சுமணன், மோனிகா, சுகன்யா, கால்நடை ஆய்வாளர் மாரிதாசன், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் அக்பர், ஜெரோம் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் கல்லல் முருகப்பா மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு வெறி நோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.