ஆதார் அட்டை புதுப்பிக்க சிறப்பு முகாம்


ஆதார் அட்டை புதுப்பிக்க சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 28 Jan 2023 12:15 AM IST (Updated: 28 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 10 இடங்களில் இன்று ஆதார் அட்டை புதுப்பிக்க சிறப்பு முகாம் நடக்கிறது.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அஞ்சல்துறை கோட்ட கண்காணிப்பாளர் ராகவேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணகிரி தலைமை அஞ்சல் அலுவலகம், ஓசூர், மத்தூர், பர்கூர், போச்சம்பள்ளி, மிட்டப்பள்ளி, மகனூர்பட்டி அஞ்சல் அலுவலகங்களிலும், ஓசூர் மோரனப்பள்ளி அரசு தொடக்கப்பள்ளி, அஞ்செட்டி குறிஞ்சி மலர் தொடக்கப்பள்ளி, சாப்பரம் மோரனஅள்ளி அரசு தொடக்கப்பள்ளி ஆகிய 10 இடங்களில் இன்று (சனிக்கிழமை) ஆதார் சிறப்பு முகாம் நடக்கிறது.

இதில், புதிய ஆதார் அட்டை பதிவு செய்ய கட்டணம் ஏதும் செலுத்த வேண்டியதில்லை. ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி, செல்போன் எண் மற்றும் பாலின, திருத்தங்கள் மேற்கொள்ள, ரூ.50, கண்விழி, புகைப்படம் மற்றும் கைரேகை திருத்தங்கள் மேற்கொள்ள, 100 ரூபாய் கட்டணமாகவும் செலுத்த வேண்டும். ஆகவே, ஆதாரில் மாற்றம் செய்ய விரும்புவோர், உரிய ஆவணங்களுடன் ஆதார் சிறப்பு முகாம் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story