சிறப்பு குறை தீர்க்கும் முகாம்


சிறப்பு குறை தீர்க்கும் முகாம்
x
தினத்தந்தி 29 Dec 2022 12:15 AM IST (Updated: 29 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தேன்கனிக்கோட்டை பேரூராட்சியில் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடந்தது.

கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை

தேன்கனிக்கோட்டை பேரூராட்சியில் உள்ளாட்சி வாரத்தையொட்டி சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு பேரூராட்சி தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். 18 வார்டுகளில் பொதுமக்கள் குடிநீர், தெருவிளக்கு, கழிவுநீர் கால்வாய், சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் கொடுத்தனர். முகாமில் வார்டு உறுப்பினர்கள் மணிவண்ணன். லிந்கோஜிராவ், சுமதிசார்லஸ், இனாயத், ஜெயந்த், கவுரிசென்னீரா, சல்மான், பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் நடேசன், இளநிலை உதவியாளர் தேவராஜ் மற்றும் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story