விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்


விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்
x

டிரோன் மூலம் பயிர்களுக்கு மருந்து தெளிப்பு குறித்து விவசாயிகளுக்கு மாவட்ட அளவில் பயிற்சி முகாம் நடந்தது.

மதுரை

மதுரை,

டிரோன் மூலம் பயிர்களுக்கு மருந்து தெளிப்பு குறித்து விவசாயிகளுக்கு மாவட்ட அளவில் பயிற்சி முகாம் நடந்தது.

பயிற்சி

சேடபட்டி வட்டாரத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் டிரோன் தெளிப்பான் மூலம் பயிர்களுக்கு மருந்து தெளித்தல் குறித்த மாவட்ட அளவிலான விவசாயிகளுக்கு பயிற்சி நடைபெற்றது. பயிற்சியில் வேளாண்மை உதவி இயக்குனர் சுமதி பேசுகையில், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத்திட்டம் பற்றியும், பிரதம மந்திரியின் கவுரவ ஊக்கநிதி திட்டம், சொட்டுநீர் பாசனம் மற்றும் தெளிப்புநீர் பாசனம் பற்றி விரிவாக எடுத்துக் கூறினார். வட்டார விவசாயிகள் ஆலோசனை குழு தலைவர் ஜெயசந்திரன் பேசுகையில், விவசாய துறையில் எண்ணற்ற திட்டங்கள் உள்ளது. அதனை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.

துணை வேளாண்மை அலுவலர் பாண்டியன் வேளாண்மைத் துறையின் மத்திய, மாநில திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் பற்றி விரிவாக எடுத்து கூறினார். உதவி செயற்பொறியாளர் செந்தில் குமார் பேசுகையில், விவசாயத்திற்கு ஆட்கள் பற்றாக்குறை உள்ளது. இதற்கு மாற்றாக எந்திரங்கள் பயன்பாட்டை பற்றி எடுத்து கூறினார். நிகழ்வில் பருத்தி பயிருக்கு டிரோன் மூலம் வேப்ப எண்ணெய் தெளித்தல் செயல்விளக்கம் செய்து காட்டப் பட்டது.

ஏற்பாடு

டிரோன் பயன்பாட்டினால் குறைவான நேரத்தில் கூடுதல் பரப்பில் மருந்து தெளிக்கலாம் என்றும் மருந்து தேவையும் குறைவாக உள்ளது என்று தெய்வேந்திரன் விளக்கமாக கூறினார்.

தோட்டக்கலை துணை அலுவலர் காசி மாயன் மற்றும் தோட்டக்கலை உதவி அலுவலர் முருகன் கலந்து கொண்டு தோட்டக்கலை துறை திட்டங்கள் குறித்து விளக்கினார். அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் பிரித்விராஜ், காளிமுத்து பயிற்சி ஏற்பாடுகளை செய்து இருந்தனர். முடிவில் அட்மா திட்ட தொழில் நுட்ப மேலாளர் கணேசராஜா நன்றி கூறினார்.


Next Story