தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்


தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
x

கிருஷ்ணகிரியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. முகாமில் கிருஷ்ணகிரி மற்றும் ஓசூரை சேர்ந்த தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு, தங்கள் நிறுவனத்திற்கு தகுதி உள்ள ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். இதில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்கள் தங்களுடைய சுயவிவரத்துடன் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.


Next Story