நீடாமங்கலத்தில் பஸ் நிலையம் அமைக்கப்படுமா?


நீடாமங்கலத்தில் பஸ் நிலையம்    அமைக்கப்படுமா?
x

நீடாமங்கலத்தில் பஸ் நிலையம் அமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

திருவாரூர்

நீடாமங்கலம்:

நீடாமங்கலத்தில் பஸ் நிலையம் அமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

நீடாமங்கலம்

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரம் நீடாமங்கலம். இங்கு மத்திய- மாநில அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இங்கு ெரயில் நிலையம் உள்ளது. கேரளா போன்ற பிற மாநிலங் களிலிருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நீடாமங்கலம் வழியாகத்தான் நாள்தோறும் திருவாரூர், நாகப்பட்டினம், நாகூர்,

வேளாங்கண்ணி, காரைக்கால் போன்ற ஊர்களுக்கும், ஆலங்குடி குருபகவான் கோவிலுக்கும் சுற்றுலாபயணிகள் பஸ்கள், வேன்கள், கார்கள் சென்று வருகின்றன. இது தவிர அரசு மற்றும் தனியார் பஸ்களும் இதர வாகனங்களும் நாள்தோறும் சென்று வருகின்றன.

அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்

நீடாமங்கலத்தில் ஏற்கனவே சாலைப்போக்குவரத்து அதிகம் இல்லாத காலத்தில் ஒரு பஸ் நிலையம் இயங்கி வந்தது. தற்போது அந்த இடத்தில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. நீடாமங்கலத்தில் அடிக்கடி ெரயில்வே கேட் மூடப்படும் போதெல்லாம் சாலையின் இருபுறமும் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

நீடாமங்கலத்தில் பஸ் நிலையம் கூட இல்லாத சூழ்நிலையில் ெரயில்வேகேட்டில் காத்திருக்கும் பொதுமக்கள் படும் அவதி அதிகமாக உள்ளது.

பயணிகள் அவதி

இந்த அவலநிலையை போக்க நீடாமங்கலத்தில் பஸ் நிலையம் அமைத்தால் சில அடிப்படை வசதிகள் மக்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்த்தபோது பேரூராட்சி நிர்வாகம் பஸ் நிலையம் கட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தது. பஸ் நிலையம் கட்டுவதற்கான இடத்தேர்வில் பிரச்சினை இருந்ததால் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

பஸ் நிலையம் இல்லாததால் மக்கள் கடைவீதிகளில் குறிப்பிட்ட சில இடங்களில் நின்று பயணிகளை இறக்கிவிட்டும், பயணிகளை ஏற்றிக் கொண்டும் செல்லும் அவலநிலை உள்ளது.

குறிப்பாக மழை, வெயில் காலங்களில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் படும் அவதி ஏராளம்.

பஸ் நிலையம் தேவை

பெருகிவரும் மக்கள் தொகை, வாகன ேபாக்குவரத்து அதிகரிப்பு, சாலை போக்குவரத்து நெருக்கடி, நீண்டதூரம் பயணம் மேற்கொள்ளும் நெடுஞ்சாலைப்பயணிகள் நலன் போன்றவற்றைக்கருத்தில் கொண்டு தொலைநோக்கு பார்வையுடன் நீடாமங்கலத்தில் அடிப்படை வசதிகள் கொண்ட பஸ் நிலையம் அமைவதன் மூலம் நெடுஞ்சாலைப் பயணிகள் உள்ளிட்ட பொதுமக்கள் பெரிதும் பயனடைய வாய்ப்பாக அமையும். மேலும் நீடாமங்கலம் நகரில் வடக்குவீதியில் நிறுத்தப்படும் கார்கள், வேன்கள் ஆட்டோக்கள் நிறுத்தவும் புதிதாக அமையும் பஸ் நிலையம் மூலம் இடம் கிடைத்து பயனுள்ளதாக இருக்கும். எனவே நீடாமங்கலத்தில் விரைவில் பஸ் நிைலயம் அமைக்க வேண்டும் என மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story