திருமயத்தில் மாட்டு வண்டி எல்கை பந்தயம்


திருமயத்தில் மாட்டு வண்டி எல்கை பந்தயம்
x

திருமயத்தில் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை

மாட்டு வண்டி பந்தயம்

திருமயம் அருகே உள்ள பரளி, மாவூர், மலைக்குடிப்பட்டி ஆகிய கிராமங்கள் இணைந்து நேற்று மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடத்தினர். மதுரை சாலையில் நடைபெற்ற பந்தயத்தில் மதுரை, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, தேனி, சிவகங்கை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 25 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. இதில் பெரிய மாடு பந்தயத்தில் போகவர எட்டு மைல் தூரம் நிர்ணயிக்கப்பட்டு 7 ஜோடி மாடுகள் கலந்து கொண்டு சாலையில் எல்லையை நோக்கி சீறிப்பாய்ந்து ஓடியது.

இதில் முதல் பரிசை பில்லமங்கலம் சீனி தேவர் மாட்டு வண்டியும், இரண்டாம் பரிசை மாவூர் பிரகன்யா மோகன் என்பவர் மாட்டு வண்டியும், மூன்றாம் பரிசை பரளி திரவியம் சேர்வை மாட்டு வண்டியும், நான்காம் பரிசை பில்லமங்கலம் வாசுதேவர் மாட்டு வண்டியும் தட்டி சென்றது.

பரிசுகள் வழங்கப்பட்டது

அதனை தொடர்ந்து சிறிய மாட்டுக்கான பந்தயம் நடைபெற்றது. இதில் 18 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. முதல் பரிசை பரளி சித்தார்த் என்பவர் மாட்டு வண்டியும், இரண்டாம் பரிசை சேரத்துப்பட்டி ஜி.கே. பிரதர்ஸ் மாட்டு வண்டியும், மூன்றாம் பரிசை வடுகப்பட்டி சிவரமேஷ் மாட்டு வண்டியும், நான்காம் பரிசை வீராமதி செல்வமணி என்பவர் மாட்டு வண்டியும் தட்டி சென்றது.

பின்னர் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. சிறப்பாக ஓட்டிய சாரதிகளுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. பந்தயத்தை ஏராளமான ரசிகர்கள் சாலையோரங்களில் நின்று கண்டு களித்தனர்.


Next Story