காளை விடும் திருவிழா


காளை விடும் திருவிழா
x

சந்தவாசலில் காளை விடும் திருவிழா நடந்தது. பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் நேரில் ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை

கண்ணமங்கலம்

சந்தவாசலில் காளை விடும் திருவிழா நடந்தது. பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் நேரில் ஆய்வு செய்தார்.

காளை விடும் திருவிழா

கண்ணமங்கலம் அருகே சந்தவாசலில் இன்று காளை விடும் திருவிழா நடைபெற்றது.

இதில் கலந்து கொள்வதற்காக பல்வேறு ஊர்களில் இருந்து சுமார் 250 காளைகள் கொண்டு வரப்பட்டது.

விழாவில் காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டது. இதில் வேகமாக ஓடி முதலிடம், 2-ம் இடம், 3-ம் இடம் பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன.

மேலும் பல்வேறு காளைகளுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது.

போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

முன்னதாக பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் மேற்பார்வையில், சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் மற்றும் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

காளைவிடும் திருவிழாவை வேடிக்கை பார்க்க வந்த சிலரை மாடு முட்டியதில் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்டனர்.

உற்சவம்

விழாவை முன்னிட்டு முன்னதாக கிராம தேவதை பாலியம்மன், பூவாத்தம்மன் உற்சவம் நடைபெற்றது. இரவில் அம்மன் திருவீதி உலாவும் நாடகமும் நடைபெற்றது.

இதற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் சார்பில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.


Next Story