காளை விடும் திருவிழா
ஆதமங்கலம்புதூரில் காளை விடும் திருவிழா நடந்தது.
கலசபாக்கம்
கலசப்பாக்கம் தாலுகாவில் உள்ள மேல்சோழங்குப்பம், வீரளூர், கடலாடி, கீழ்பாலூர் உள்பட பல்வேறு கிராமங்களில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு கடந்த 4 நாட்களாக காளை விடும் திருவிழா நடைபெற்றன.
காணும் பொங்கலை முன்னிட்டு இன்று ஆதமங்கலம்புதூர் கிராமத்தில் காளை விடும் விழா நடந்தது.
இதில் 7 மாவட்டங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டுவரப்பட்டு மாடுகளின் கொம்புகளில் விலை உயர்ந்த பட்டுசேலைகள், வெள்ளி, தங்க நகை ஆகியவைகள் அணிவித்து 30 அடி தொலைவுக்குள் பிடிக்க வேண்டும் என நிர்ணயம் செய்யப்பட்டது.
இதில் 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
மாலை காணும் பொங்கலை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வந்திருந்தனர்.
போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உத்தரவின் பெயரில் 4 துைண போலீஸ் சூப்பிரண்டுகள், 6 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
மாலை 4 மணி முதல் காளை விடும் விழா தொடங்கி 6 மணி வரை நடந்தது.
முன்னதாக நிகழ்ச்சியை தி.சரவணன் சரவணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் ஒன்றிய குழு தலைவர் அன்பரசிராஜசேகரன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணியன் உள்பட உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழா குழு தலைவர் ராஜா செய்திருந்தார்.