எருது விடும் விழா


எருது விடும் விழா
x

பாலக்கோடு அருகே எருது விடும் விழா நடைபெற்றது.

தர்மபுரி

பாலக்கோடு:

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே சோமனஹள்ளி கிராமத்தில் அக்குமாரியம்மன் சித்திரை திருவிழாவையொட்டி எருது விடும் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் 7-வது நாளான நேற்று எருது விடும் விழா நடந்தது. இதில் 12 கிராம பொதுமக்கள் ஒன்றிணைந்து ஊருக்கு ஒரு காளை வீதம் 12 காளைகளை அழைத்து வந்தனர். முன்னதாக கிராம மக்கள் மேளதாளங்களுடன் குல வழக்கப்படி கோ பூஜை செய்து புனித நீர் காளைகளின் மேல் தெளித்த உடன் ஊர் கவுண்டர் காளை விடப்பட்டது. அதைத்தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் கோவிலை சுற்றி ஒவ்வொன்றாக களம் இறக்கப்பட்டன. சீறி பாய்ந்து வரும் காளைகளை அடக்க மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு காளையை விரட்டி சென்றனர். இதனை காண சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர். எருது விடும் விழாவையொட்டி பாலக்கோடு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story