விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் புத்த பூர்ணிமா கருத்தரங்கம்
திருச்செந்தூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் புத்த பூர்ணிமா கருத்தரங்கம் நடைபெற்றது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புத்த பூர்ணிமா, காரல் மார்க்ஸ் பிறந்த நாள் விழா, அயோத்தி தாச பண்டிதர் நினைவு நாள் ஆகிய முப்பெரும் விழாவை முன்னிட்டு கருத்தரங்கம் மற்றும் சமூகநல்லிணக்க விருந்து நடைபெற்றது. மாவட்ட செயலாளர் முரசு தமிழப்பன் தலைமை தாங்கினார். நாடாளுமன்ற தொகுதி செயலாளர் வழக்கறிஞர் ராஜ்குமார், சமூக நல்லிணக்க பேரவை மாவட்ட அமைப்பாளர் மு.தமிழ்பரிதி, செய்தி தொடர்பு மைய மாவட்ட அமைப்பாளர் வேம்படிமுத்து, உடன்குடி ஒன்றிய பொருளாளர் டேவிட் ஜான்வளவன், தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட துணை அமைப்பாளர் சரவண நந்தன், திருச்செந்தூர் நகர விடுதலைச் சிறுத்தைகள் கட்சி செயலாளர் கரம்பை உதயா ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருச்செந்தூர் ஒன்றியச் செயலாளர் சங்கத்தமிழன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளர்களாக மண்டலச்செயலாளர் தமிழினியன், கருத்தியல் பரப்பு மாநில துணைச் செயலாளர்கள் தமிழ்க்குட்டி, எழுத்தாளர் அமுதன் துரையரசன், சமூகநீதி பேரவை பொதுச்செயலாளர் அகமது ஷாஹிபு, தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்டச் செயலாளர் மாரிச்செல்வம், தமிழ்நாடு திருக்கோவில் முதுநிலை பணியாளர்கள் நலச் சங்கத்தின் முன்னாள் தலைவர் தோப்பூர் சேகர் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் அம்பேத்கர் மக்கள் இயக்க மாவட்ட செயலாளர் மகேஷ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மத்திய மாவட்ட துணைச் செயலாளர் மாரிமுத்து மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.