அண்ணனை தாக்கிய தம்பி கைது


அண்ணனை தாக்கிய தம்பி கைது
x
தினத்தந்தி 29 Jun 2023 2:34 AM IST (Updated: 29 Jun 2023 1:23 PM IST)
t-max-icont-min-icon

களக்காடு அருகே அண்ணனை தாக்கிய தம்பி கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

களக்காடு:

களக்காடு அருகே உள்ள சிங்கம்பத்து ஜெகஜீவன்புரத்தை சேர்ந்தவர் விநாயகமூர்த்தி (வயது 43). கட்டிட தொழிலாளி. இவரது தந்தை சுப்பையா தனக்கு சொந்தமான இடத்தை விநாயகமூர்த்திக்கு எழுதி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் விநாயகமூர்த்திக்கும், அவரது தம்பி கோவிந்தராஜிக்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் சம்பவத்தன்று கோவிந்தராஜ், தனது தந்தை சுப்பையாவிடம் சென்று மீண்டும் தகராறு செய்தார். இதை விநாயகமூர்த்தி தட்டிக் கேட்டார். இதில் ஆத்திரம் அடைந்த கோவிந்தராஜ், விநாயகமூர்த்தியை அவதூறாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கோவிந்தராஜை கைது செய்தார்.


Next Story