குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
புத்தூர் தேசிய நெடுஞ்சாலை அருகில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
மயிலாடுதுறை
கொள்ளிடம்:
கொள்ளிடம் அருகே புத்தூர் தேசிய நெடுஞ்சாலை அருகில் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் ஊராட்சி பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது இந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த 20 நாட்களாக குடிநீர் வீணாகி சாலையில் வழிந்தோடுகிறது. இந்த அவலநிலை தொடர்ந்து நீடித்தால் அப்பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மக்கள் நலன் கருதி உடனடியாக நடவடிக்கை எடுத்து மேற்கண்ட பகுதியில் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்ய வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story