குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்


குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
x
தினத்தந்தி 20 Dec 2022 12:15 AM IST (Updated: 20 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை மூலம் பாசனத்திற்கும், குடிநீர் தேவைக்கும் தண்ணீர் திறக்கப்படுகிறது. ஆழியாற்றில் திறக்கப்படும் தண்ணீரை எடுத்து, சுத்திகரித்து கோவை குறிச்சி-குனியமுத்தூர் குடிநீர் திட்டம், பொள்ளாச்சி நகராட்சி மற்றும் பல்வேறு கூட்டுக்குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் ஆத்துப்பொள்ளாச்சி பகுதியில் குறிச்சி-குனியமுத்தூர் மற்றும் கிணத்துக்கடவிற்கு செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக சுமார் 6 அடி உயரத்துக்கு குடிநீர் பீய்ச்சியடித்து வீணாகி வருகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ஜனதாவினர் சப்-கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் , இந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு ஒரு வாரத்திற்கு மேலாகியும் சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அடிக்கடி சாலை பழுதாகி விடுகிறது. எனவே அதிகாரிகள் உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.


Next Story