1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சத்தான சிற்றுண்டி : பணிகளை தொடங்கியது தமிழக அரசு


1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சத்தான சிற்றுண்டி : பணிகளை தொடங்கியது தமிழக அரசு
x
தினத்தந்தி 14 July 2022 11:47 AM IST (Updated: 14 July 2022 11:48 AM IST)
t-max-icont-min-icon

அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் சத்தான சிற்றுண்டி வழங்குவதற்கான பணிகளை தமிழ்நாடு அரசு இன்று தொடங்கியுள்ளது

சென்னை,

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும்.1 முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் சிற்றுண்டி வழங்கப்படும் என முதல் அமைச்சர் முக ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார்.அதன்படி .அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்ட பணிகளை தமிழ்நாடு அரசு தொடங்கியது.அரசு பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான தொடக்கக்கல்வி மாணவர்களுக்கு சத்தான சிற்றுண்டி வழங்க திட்டமிப்பிடப்பட்டுள்ளது.

அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் சத்தான சிற்றுண்டி வழங்குவதற்கான பணிகளை தமிழ்நாடு அரசு இன்று தொடங்கியுள்ளது. தமிழகத்தில் 15 மாவட்டங்களில் முதற்கட்டமாக பணிகள் தொடங்கப்படவுள்ளது

காலை 5:30-7:45 மணிக்குள் சமையல் பணியை முடிக்கவும்,காலை 8:15-8:45 மணிக்குள் உணவை குழந்தைகளுக்கு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.இந்த சிற்றுண்டி மகளிர் சுய உதவிக்குழுவினால் சமைத்து வழங்கப்படும் என தெரிவிக்கப்ட்டுள்ளது.பணிகள் தொடங்கப்படவுள்ள நிலையில் விரைவில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைப்பார் என கூறப்படுகிறது.


Next Story