சத்துணவு ஊழியர்கள் மூலம் காலை சிற்றுண்டி திட்டம்


சத்துணவு ஊழியர்கள் மூலம் காலை சிற்றுண்டி திட்டம்
x
தினத்தந்தி 14 July 2023 2:45 AM IST (Updated: 14 July 2023 2:46 AM IST)
t-max-icont-min-icon

அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலம் செயல்படுத்த வேண்டும் என்று சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நீலகிரி

ஊட்டி

அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலம் செயல்படுத்த வேண்டும் என்று சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாநில செயற்குழு கூட்டம்

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் முன்னேற்ற சங்க மாநில செயற்குழு கூட்டம், ஊட்டியில் உள்ள வருவாய்த்துறை அலுவலர் சங்க கட்டிடத்தில் நடந்தது. இதற்கு தலைவர் விஜயா தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் சவீதா, பொருளாளர் அமிர்தா, தணிக்கையாளர் முருகேசன், துணை தலைவர் கல்யாண சுந்தரம் மற்றும் ராஜலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-

அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களை கொண்டு செயல்படுத்த வேண்டும். அமைப்பாளர்கள் ஓய்வுபெறும் வயதை 60-ல் இருந்து 62 ஆக உயர்த்த வேண்டும்.

25 சதவீதம்

பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களில் 25 சதவீதம் பதவி உயர்வு வழங்க வேண்டும். உணவூட்டு செலவின மானியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். பணி வரன்முறை செய்து வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கி அரசு ஊழியராக்க வேண்டும்.

காலி பணியிடங்களில் தற்போது பணிபுரிபவர்களுக்கு பணி மாறுதல் வழங்க வேண்டும். கூடுதல் பொறுப்புபடி நாளொன்றுக்கு ரூ.100 வழங்க வேண்டும்.

பணியில் இருந்து ஓய்வுபெறும் சத்துணவு அமைப்பாளர்கள், ஊழியர்களுக்கு ரூ.2 லட்சம், சமையலர்களுக்கு ரூ.1 லட்சம், உதவியாளர்களுக்கு ரூ.75 ஆயிரம் வழங்க வேண்டும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இதில் மாநில செயலாளர்கள் சீனிவாசன், முத்துமாலா, மாவட்ட தலைவர் கீதா, மாவட்ட செயலாளர் ராமு மற்றும் ஊட்டி வட்ட தலைவர் ஜெயசீலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story