3 கோவில்களில் உண்டியலை உடைத்து திருட்டு


3 கோவில்களில் உண்டியலை உடைத்து திருட்டு
x

சேரன்மாதேவி அருகே 3 கோவில்களில் உண்டியலை உடைத்து திருட்டுப்போனது

திருநெல்வேலி

சேரன்மாதேவி:

சேரன்மாதேவி அருகே உள்ள பூதத்தான்குடியிப்பு பகுதியில் நாராயணசாமி கோவில் உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவில் கோவில் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து சுமார் ரூ.40 ஆயிரம் காணிக்கையை திருடி சென்றனர். அதேபோல் அருகில் உள்ள சுடலைமாடசாமி கோவில் மற்றும் பிள்ளையார் கோவில் உண்டியல்களை உடைத்து காணிக்கையை திருடி சென்று உள்ளனர். இதுகுறித்து சேரன்மாதேவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story