பொதுமக்கள் குறைகளை தொிவிக்கும் புகாா் பெட்டி பகுதி


பொதுமக்கள் குறைகளை தொிவிக்கும் புகாா் பெட்டி பகுதி
x

தினத்தந்தி புகாா்பெட்டி

ஈரோடு

பழுதடைந்த சாலை

தாளவாடி அருகே உள்ள மல்லன்குழி ஊராட்சிக்கு உள்பட்ட கிராமம் சூசைபுரம். இங்குள்ள மலைவாழ் மக்கள் பயன்பெறும் வகையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மருத்துவமனைக்கு செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் மருத்துவமனைக்கு நோயாளிகள் நடந்தோ அல்லது வாகனத்திலோ செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே பழுதடைந்து காணப்படும் இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், சூசைபுரம்.

வீணாகும் குடிநீர்

கோபியில் உள்ள சத்தி ரோட்டில் நகராட்சி அலுவலகம் எதிரில் கடந்த 6 மாதங்களாக குழாய் உடைந்து அதில் இருந்து குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது. எனவே அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்து குடிநீர் வீணாக வெளியேறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், கோபி.

குவிந்து கிடக்கும் குப்பைகள்

ஈரோடு அரசு ஆஸ்பத்திரி பிணவறை முன்பு அதிக அளவில் குப்பைகள் மற்றும் மருந்து பொருட்கள் குவிந்து கிடக்கிறது. அதிக நாட்களாக கிடப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பல்வேறு தொற்று நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்டத்துறை அதிகாரிகள் இதை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இளங்கோ, ஈரோடு.

ரோட்டில் ஓடும் குடிநீர்

டி.என்.பாளையம் ஒன்றியம் கொண்டையம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட அத்தாணி- சத்தியமங்கலம் சாலையில் கள்ளிப்பட்டி காந்தி சிலை அருகில் குடிநீர் குழாயில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டது. இதனால் குடிநீர் ரோட்டில் பாய்ந்து வீணாக ஓடியது. எனவே அதிகாரிகள் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், கள்ளிப்பட்டி.

பாராட்டு

அந்தியூர் அருகே உள்ள ஆப்பக்கூடலில் நடுரோட்டில் போக்குவரத்துக்கு இடையூறாக கற்கள் குவிக்கப்பட்டிருந்தன. இதுபற்றிய செய்தி 'தினத்தந்தி' நாளிதழின் புகார் பெட்டி பகுதியில் பிரசுரமாகி இருந்தது. இதைத்தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று அங்கிருந்த கற்களை அப்புறப்படுத்தி அகற்றினர். இதுகுறித்து செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறோம்.

பொதுமக்கள், அந்தியூர்.

----------------


Next Story