2-வது நாளாக படகு போக்குவரத்து தாமதம்


2-வது நாளாக படகு போக்குவரத்து தாமதம்
x

2-வது நாளாக படகு போக்குவரத்து தாமதம்

கன்னியாகுமரி


2-வது நாளாக படகு போக்குவரத்து தாமதம்

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் அதிகாலையில் சூரிய உதயத்தை பார்த்து ரசித்து விட்டு, முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்வார்கள். பின்னர், கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் சென்று பார்த்து விட்டு திரும்புவது வழக்கம். இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை படகுகளை இயக்கி வருகிறது.

இந்தநிலையில் நேற்று காலையில் 2-வது நாளாக கடல் நீர்மட்டம் தாழ்ந்தது. இதனால், வழக்கம் போல் காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கப்படவில்லை. பின்னர், 10 மணிக்கு கடலில் நீர்மட்டம் இயல்பு நிலைக்கு திரும்பியதை தொடர்ந்து 2 மணிநேரம் தாமதமாக படகு போக்குவரத்து தொடங்கியது. அதைதொடர்ந்து சுற்றுலா பயணிகள் உற்சாகமாக படகில் சென்று விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்த்துவிட்டு திரும்பினர்.


Next Story