பா.ஜ.க.வினர் உண்ணாவிரத போராட்டம்


பா.ஜ.க.வினர் உண்ணாவிரத போராட்டம்
x

தி.மு.க..வின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி பா.ஜ.க.வினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

விழுப்புரம்

விழுப்புரம்

தமிழகத்தில் கடந்த 2021 சட்டசபை தேர்தலின்போது தி.மு.க. சார்பில், குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.ஆயிரம் வழங்கப்படும், சமையல் கியாஸ் சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் தரப்படும், பெட்ரோல்- டீசல் விலை குறைக்கப்படும் என பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. அக்கட்சி ஆட்சியை பிடித்து ஓராண்டுக்கு மேலாகியும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் உள்ளதை கண்டித்தும், அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் பாரதீய ஜனதா கட்சிசார்பில் கட்சியின் அமைப்பு ரீதியாக உள்ள 60 மாவட்டங்களின் தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

அந்த வகையில் விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

சிறப்புரை

இப்போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர்கள் ராம.ஜெயக்குமார், பாண்டியன், சத்தியநாராயணன், பொருளாளர் சுகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் சிவதியாகராஜன் அனைவரையும் வரவேற்றார். மாநில செயலாளர் மீனாட்சி நித்யசுந்தர், மாநில செயற்குழு உறுப்பினர் கலிவரதன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இதில் நிர்வாகிகள் செஞ்சி தொகுதி பொறுப்பாளர் கோகுல், விவசாய அணி துணைத்தலைவர்கள் சுரேஷ், பழனி, சந்திரமோகன் தர்மராஜ், துரைசக்திவேல், சதாசிவம், பாலசுப்பிரமணியன், ஜோதிராஜா, தாஸசத்யன், சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story