செறிவூட்டப்பட்ட பிஸ்கட் வழங்கும் திட்டம் தொடக்கம்


செறிவூட்டப்பட்ட பிஸ்கட் வழங்கும் திட்டம் தொடக்கம்
x
தினத்தந்தி 26 Jun 2023 10:21 PM IST (Updated: 27 Jun 2023 2:15 PM IST)
t-max-icont-min-icon

செறிவூட்டப்பட்ட பிஸ்கட் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

திருப்பூர்

 ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் பிறந்து 6 மாதம் முதல் 6 வயதுடைய ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

 இந்த பிஸ்கட்டுகள் கோதுமை, வேர்க்கடலை, கேழ்வரகு, சர்க்கரை, சுத்திகரிக்கப்பட்ட தாவர எண்ணெய் உள்ளிட்ட பொருட்களின் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. வைட்டமின் உள்ளிட்ட சத்துக்களை உள்ளடக்கிய இந்த பிஸ்கட்டுகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் எடை குறைவுள்ள குழந்தைகளுக்கு தினசரி இணை உணவுடன் சேர்த்து வழங்கப்படுகிறது.

 அதன்படி மடத்துக்குளம் வட்டாரத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்ட அலுவலகம் மூலம் நடந்த நிகழ்ச்சியில் மடத்துக்குளம் ஒன்றியக்குழு துணைத்தலைவர் கே.ஈஸ்வரசாமி, பேரூராட்சித்தலைவர் கலைவாணி பாலமுரளி ஆகியோர் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பிஸ்கட்டுகள் வழங்கினர்.


Next Story