ரூ.75 லட்சத்தில் பசுமை பூங்கா அமைக்க பூமி பூஜை


ரூ.75 லட்சத்தில் பசுமை பூங்கா அமைக்க பூமி பூஜை
x

தர்மபுரி ஏ.எஸ்.டி.சி. காலனியில் ரூ.75 லட்சத்தில் பசுமை பூங்கா அமைக்க பூமி பூஜை நடந்தது.

தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி பென்னாகரம் ரோடு ஏ.எஸ்.டி.சி. காலனியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.75 லட்சம் மதிப்பில் நகராட்சி பசுமை பூங்கா அமைக்கப்படுகிறது. சுற்றுச்சுவர் வசதியுடன் இந்த பூங்கா வளாகத்தில் நிழல் தரும் மரக்கன்றுகள் நடப்பட உள்ளது. மேலும் நடைபாதை, பொதுமக்கள் அமர்வதற்கு இருக்கைகள், குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், அழகிய செடிகள், ஆகியவை அமைக்கப்பட உள்ளது. இந்த பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது தலைமை தாங்கி பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் சித்ரா சுகுமார், நகராட்சி துணைத்தலைவர் நித்யா அன்பழகன், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் நாட்டான் மாது, நகர பொறுப்பாளர் அன்பழகன், நகராட்சி பொறியாளர் ஜெயசீலன், நகரமைப்பு அலுவலர் ஜெயவர்மன், உதவி பொறியாளர் தவமணி, கவுன்சிலர் ஜெகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story