பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைவு


பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைவு
x

பவானிசாகர் அணைக்கு வரும் நீாின் அளவு குறைந்தது

ஈரோடு

பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் மழை பெய்யவில்லை. இதனால் அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு அணைக்கு வினாடிக்கு 1,049 கன அடி தண்ணீர் வந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 79.38 அடியாக இருந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு 1,100 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 5 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்று மாலை 4 மணி அளவில் அணையின் நீர்மட்டம் 79.21 அடியாக இருந்தது. அப்போது அணைக்கு வினாடிக்கு 183 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு 1,100 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 5 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டது.


Next Story