திருமணத்துக்கு பெற்றோர் வற்புறுத்தியதால்விஷம் குடித்து சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் சாவு


திருமணத்துக்கு பெற்றோர் வற்புறுத்தியதால்விஷம் குடித்து சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் சாவு
x

திருமணத்துக்கு பெற்றோர் வற்புறுத்தியதால் விஷம் குடித்து சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் இறந்தாா்.

ஈரோடு

டி.என்.பாளையம்

பங்களாப்புதூர் அண்ணாநகர் கள்ளியங்காட்டு தோட்டத்தை சேர்ந்தவர் கொமாரசாமி. விவசாயி. இவருடைய மகள் பவித்ரா (வயது 26). இவர் திருப்பூரில் உள்ள தனியார் ஆயத்த ஆடை நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். பவித்ராவுக்கு திருமணம் செய்ய பெற்றோர் முடிவு எடுத்து வரன் தேடி வந்தது உள்ளனர். ஆனால் பவித்ரா தனக்கு திருமணம் வேண்டாம் என கூறியதாக தெரிகிறது. ஆனால் அவருடைய பெற்றோர்் திருமணத்துக்கு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பவித்ரா, சம்பவத்தன்று விஷம் குடித்து வீட்டில் மயங்கி விழுந்தார். உடனே அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோபியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story