முன்விரோதம் காரணமாக இருதரப்பினர் மோதல்; 4 பேர் மீது வழக்கு


முன்விரோதம் காரணமாக   இருதரப்பினர் மோதல்; 4 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 8 Nov 2022 12:15 AM IST (Updated: 8 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

போடியில் முன்விரோதம் காரணமாக இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது

தேனி

போடி கஸ்பா மணியம் தெருவை சேர்ந்தவர் சிவசங்கர் (வயது 50). இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் இந்துராணி. இவர்கள் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சிவசங்கர் வள்ளுவர் சிலை அருகே உள்ள டீக்கடையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த பரணி, வேல்முருகன் ஆகியோர் அங்கு வந்தனர்.

அவர்கள் இந்துராணிக்கு ஆதரவாக சிவசங்கரிடம் பேசி தகராறு செய்தனர். தகராறு முற்றிய நிலையில் தகாத வார்த்தைகளால் பேசி, செங்கல், கண்ணாடி டம்ளரால் சிவசங்கர் தலையில் தாக்கினர். இதுகுறித்து அவர் போடி நகர் போலீசில் புகார் செய்தார். இதேபோல் பரணி, வேல்முருகன் ஆகிய இருவரும் தங்களை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக சிவசங்கர் மீது போலீசில் புகார் கொடுத்தனர். இரு தரப்பினரும் கொடுத்த புகார்களின்பேரில் இந்துராணி, சிவசங்கர் உள்பட 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story