குற்றாலத்தில் குவிந்த அய்யப்ப பக்தர்கள்


குற்றாலத்தில் குவிந்த அய்யப்ப பக்தர்கள்
x
தினத்தந்தி 7 Jan 2023 12:15 AM IST (Updated: 7 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

குற்றாலத்தில் அய்யப்ப பக்தர்கள் குவிந்தனர்.

தென்காசி

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இடையில் சில நாட்கள் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பின்னர் வெள்ளப்பெருக்கு குறைந்து தண்ணீர் சீராக விழுகிறது. தற்போது சபரிமலைக்கு தென்காசி வழியாக செல்லும் அய்யப்ப பக்தர்கள் குற்றாலத்திற்கு வந்து குளித்துச் செல்கிறார்கள்.

நேற்று காலையில் ஆயிரக்கணக்கான அய்யப்ப பக்தர்கள் குற்றாலத்திற்கு வந்தனர். திருவாதிரை ஆருத்ரா தரிசன நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர்கள் குற்றாலம் பேரருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். ஆனால் பெண்கள் யாரும் வரவில்லை. இதனால் பெண்கள் குளிக்கும் பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.


Next Story