ஆயுர்வேத மருத்துவ கண்காட்சி- முகாம்


ஆயுர்வேத மருத்துவ கண்காட்சி- முகாம்
x

ஆயுர்வேத மருத்துவ கண்காட்சி- முகாமை இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

திருச்சி

திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் அருகே உள்ள ஆர்.சி. மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அகில இந்திய ஆயுர்வேத கூட்டமைப்பு திருச்சி மண்டலம் மற்றும் திருச்சி ஆயுர்வேத கூட்டமைப்பு சார்பில் "ஆயுர்மேளா 2022" என்ற ஆயுர்வேத மருத்துவ கண்காட்சி மற்றும் இலவச மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. முகாமை இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ. குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இதில் சி.சி.ஐ.எம்.முன்னாள் தலைவர் வனிதா முரளி குமார், டாக்டர் தன்வந்திரி பிரேம்வேல், இம்காப்ஸ் தலைவர் டாக்டர் கண்ணன் ஆகியோர் சிறப்புவிருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

கண்காட்சியில் 45-க்கும் மேற்பட்ட ஆயுர்வேதிக் நிறுவனங்கள் ஸ்டால்கள் அமைத்து தங்களது பொருட்களை காட்சிப்படுத்தியிருந்தனர். இதில் ஏராளமான மருத்துவர்கள், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து ஆயுர்வேத மருத்துவர்கள், மாணவர்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. பின்னர் விழாவின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ராஜாமுகமது கூறும்போது, இந்த மருத்துவ முகாம் மற்றும் ஆயுர்வேத கண்காட்சி தொடர்ந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெறுகிறது. அதன் பின் மதியம் 2.30 மணி முதல் மாலை 5 மணி வரை மருத்துவர்கள் மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் கலந்துரையாடல் கூட்டம் மற்றும் சான்றிதழ் பரிசளிப்பு விழா நடைபெறுகிறது. எனவே பொதுமக்கள் இதில் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றார்.


Next Story