வடமாநில தொழிலாளர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு விழிப்புணர்வு
வடமாநில தொழிலாளர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு விழிப்புணர்வு
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் வடமாநில தொழிலாளர்களுக்கு எதிராக சமூக விரோதிகள் சிலர் வதந்தி பரப்பி வருகிறார்கள். இது பொய்யான தகவல் எனவும், வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக பணிபுரிந்து வருவதையும் ஆய்வு செய்து உறுதி செய்ய திருப்பூர் மாவட்ட காவல்துறையினர் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களை சந்தித்து அறிவுரை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் நேற்று அருள்புரத்தில் உள்ள பனியன் ஏற்றுமதி நிறுவனத்தில் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய், அங்கு பணிபுரியும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.
அப்போது அவர் கூறும்போது, 'சமூக வலைதளங்களில் சமீப காலமாக வடமாநில தொழிலாளர்கள் தாக்குதல் போன்ற போலி வீடியோவை பதிவிட்டு வதந்தி பரப்பி வருகிறார்கள். அவற்றை நம்ப வேண்டாம். காவல்துறையின் உதவியை எளிதில் பெறுவதற்காக வடமாநில தொழிலாளர்களுக்கு என்று பிரத்யேகமாக தனிப்பிரிவு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. அந்த தனிப்பிரிவை 94981 01320, 0421 2970017 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். பெண் தொழிலாளர்களுக்கு மகளிர் தின வாழ்த்துக்கள்' என்றார்.