பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு
பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு
அவினாசி
அவினாசிராஜன் நகரில் செயல்பட்டு வரும் அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளியில் அவினாசி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் நடந்த மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலர் பாஸ்கர், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள். அப்போது 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் மோட்டார்சைக்கிள் ஓட்டக்கூடாது. 18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் ஓட்டுனர் உரிமம் பெற்ற பின்னரே மோட்டார்சைக்கிள் ஓட்ட வேண்டும்.
வாகனம் ஓட்டும் போது கட்டாயம் ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும். தவறும்பட்சத்தில் மாணவரின் பெற்றோருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் மற்றும் 3 ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்படும். மாணவர்கள் பள்ளிக்கு வரும் போதும் மற்றும் பள்ளிவிட்டு திரும்பும் போதும் ரோட்டில் நின்று லிப்ட் கேட்கக்கூடாது. அவ்வாறு லிப்ட் கேட்டு செல்வதால் பல விபரீதங்களை சந்திக்க நேரிடும் என்பதால் லிப்ட் கேட்டு செல்வதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு பள்ளி மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் ஹேமலதா (பொறுப்பு), ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர்.