தட்சணமாற நாடார் சங்க கல்லூரியில் விழிப்புணர்வு கூட்டம்
தட்சணமாற நாடார் சங்க கல்லூரியில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
வள்ளியூர் (தெற்கு):
தெற்கு கள்ளிகுளம் தட்சணமாற நாடார் சங்க கல்லூரியில் வள்ளியூர் சென்ட்ரல் ரோட்டரி சங்கம், விருதுநகர் ரோட்டரி சங்கம், தட்சணமாற நாடார் சங்க கல்லூரியின் ஐ.கி.யு.ஏ.சி. பிரிவு ஆகியவை சார்பில் யாதுமானவள் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. வள்ளியூர் சென்ட்ரல் ரோட்டரி சங்க தலைவர் மேக்ரோ பொன்தங்கதுரை தலைமை தாங்கி பேசினார். சிறப்பு பேச்சாளர் ஜெயந்தஸ்ரீபாலகிருஷ்ணன் பேசும்போது, இளைஞர்கள் பெண்களையும், தாயையும் போற்றி பாதுகாக்க வேண்டும். பெண்கள் பெற்றோர்களையும், ஆண்களையும் போற்றி பாதுகாக்க வேண்டும்.
கிராமப்புற மாணவர்கள் என்ற தாழ்வு மனப்பான்மைக்கு இன்றைக்கு இடமில்லை. ஒவ்வொரு மாணவர்களிடமும் நவீன வசதிகள் நிறைந்த அலைபேசி வைத்திருக்கிறார்கள். அலைபேசியை உங்கள் கல்வி வளர்ச்சிக்காகவும், வாழ்வின் முன்னேற்றத்திற்காகவும் மட்டும் பயன்படுத்திக்கொள்ளுங்கள், என்றார்.
நிகழ்ச்சியில் ரோட்டரி கவர்னர் ஏ.கே.எஸ்.வி.ஆர்.முத்து, முன்னாள் கவர்னர் ஜே.நவமணி, ரோட்டரி யாதுமானவள் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் டி.விஜயகுமாரி, தட்சணமாற நாடார் சங்க கல்லூரி செயலாளர் வி.பி.ராமநாதன், கல்லூரி முதல்வர் மேஜர் டி.ராஜன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
முன்னதாக சிறப்பு பேச்சாளர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணனை அறிமுகம் செய்து வலங்கைபுலி என்ற ரமேஷ் பேசினார். ரோட்டரி செயலாளர் சுகிர்கந்தன் இறைவணக்கம் பாடினார். ரோட்டரி நிர்வாகி எல்.சுப்பிரமணியன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
முடிவில் கல்லூரி பேராசிரியர் பாலமுருகன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை ரோட்டரி நிர்வாகிகளுடன் கல்லூரி ஐ.கி.யு.ஏ.சி. பிரிவு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் புஷ்பராஜ், கண்காணிப்பாளர் பாலச்சந்திரன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.