போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம்


போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம்
x

மயிலாடுதுறையில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது

மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பாக, போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. மகாதானத்தெருவில் உள்ள தேசிய தொடக்கப் பள்ளி முன்பிருந்து தொடங்கிய இந்த ஊர்வலத்தை கலெக்டர் லலிதா கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில், பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி போதை பொருட்களுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். மகாதானத்தெரு, சின்னக்கடை தெரு, பட்டமங்கலத்தெரு வழியாக சென்ற ஊர்வலம் மீண்டும் மகாதானத்தெருவை வந்தடைந்தது. முன்னதாக, போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு கலெக்டர் வழங்கினார். இதில், மயிலாடுதுறை மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தங்கவேலு, வருவாய் கோட்டாட்சியர் யுரேகா, உதவி ஆணையர் (கலால்) நரேந்திரன், தாசில்தார் மகேந்திரன், பள்ளி தலைமையாசிரியர் காஞ்சிநாதன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.






Next Story