காட்பாடியில் விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம்
75-வது சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவை முன்னிட்டு காட்பாடியில் விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலத்தை வி.ஐ.டி. வேந்தர் விசுவநாதன் தொடங்கி வைத்தார்.
காட்பாடி
75-வது சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவை முன்னிட்டு காட்பாடியில் விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலத்தை வி.ஐ.டி. வேந்தர் விசுவநாதன் தொடங்கி வைத்தார்.
சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா
44-வது சர்வதேச சதுரங்க போட்டி மற்றும் 75-வது சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவை முன்னிட்டு காட்பாடியில் விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் இன்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஜே.கே.என்.பழனி முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் கோ.விசுவநாதன் கலந்துகொண்டு விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.
விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலத்தில் காட்பாடி, காங்கேயநல்லூர், பிரம்மபுரம், கார்ணாம்பட்டு, வஞ்சூர் மற்றும் அச்சீலியம் பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் ரோட்டரி, தொண்டு நிறுவனங்களை சேர்ந்த 500 பேர் கலந்துகொண்டனர்.
விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம்
வி.ஐ.டி. பல்கலைக்கழகம் அருகில் இருந்து புறப்பட்ட விழிப்புணர்வு ஊர்வலம் திருவலம் சாலை, ஓடை பிள்ளையார் கோவில் வழியாக சென்று காந்தி நகரில் உள்ள ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்ட அலுவலகத்தில் முடிந்தது.
அங்கு நடந்த நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களை வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா வழங்கினார்.
நிகழ்ச்சியில் வேலூர் கோட்டை அரசு அருங்காட்சியக செயலாளர் சரவணன், வேலூர் கல்வி மாவட்ட அலுவலர் சம்பத், பள்ளி கல்வியின் உதவி திட்ட அலுவலர் மகாலிங்கம், ஜூனியர் ரெட்கிராஸ் மாவட்ட அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன், வேலூர் ஏஞ்சல்ஸ் ரோட்டரி சங்க தலைவர் அருளரசி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
----
3 காலம்.