விழிப்புணர்வு பிரசாரம்
தீயணைப்புத்துறை சார்பில் விழிப்புணர்வு பிரசாரம் ெசய்யப்பட்டது.
விருதுநகர்
தாயில்பட்டி
வெம்பக்கோட்டை தீயணைப்பு நிலையம் சார்பில் தீ தொண்டு நாள் வார விழாவினை முன்னிட்டு தீயணைப்பு நிலைய அலுவலர் செந்தூர்பாண்டி தலைமையில் வெம்பக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி, தொழிற்சாலைகள், பட்டாசு ஆலைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. அப்போது விழிப்புணர்வு குறித்த நோட்டீசுகளை வினிேயாகம் செய்தனர். சமையல் அறைக்குள் இறுக்கமான பருத்தி நூலில் ஆன ஆடைகளை அணிய வேண்டும்.
உடலில் தீக்காயம் பட்டால் உடனடியாக சிகிச்சை பெற வேண்டும். பட்டாசு ஆலைகளில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களும் பட்டாசு விதிகளை முழுமையாக பின்பற்ற வேண்டும்.
பட்டாசு ஆலைக்குள் பருத்தி ஆடைகளையே அணிய வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
Related Tags :
Next Story