யானைக்கால் நோய் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு முகாம்


யானைக்கால் நோய் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு முகாம்
x

யானைக்கால் நோய் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.

கரூர்

கிருஷ்ணராயபுரம் வட்டாரத்திற்கு உட்பட்ட பஞ்சப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் யானைக்கால் நோய் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதற்கு சுகாதாரத்துறை கரூர் மாவட்ட துணை இயக்குனர் சந்தோஷ் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட பூச்சியியல் வல்லுனர் சிவக்குமார், வட்டார மருத்துவ அலுவலர்கள் கலந்துகொண்டு யானைக்கால் நோய் ஒழிப்பு குறித்தும், அதனை தடுக்கும் முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உபகரணங்கள், மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன. இதில், நோயினால் பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story