மண்பாண்ட தொழில் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு
கோத்தகிரி அரசு பள்ளியில் மண்பாண்ட தொழில் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நீலகிரி
கோத்தகிரி
கோத்தகிரி அரசு மேல்நிலைப் பள்ளியில் அழிந்து வரும் பாரம்பரிய மண்பாண்ட தொழில் மற்றும் கீழடி தமிழரின் தாய்மடி அருங்காட்சியகத்தை பிரதிபலிக்கும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மண்பாண்ட தொழில் குறித்தும், களிமண் சிற்பங்கள் செய்வது குறித்தும் கலைஞர்கள் மூலம் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் தமிழரின் பழங்கால சிற்பக்கூடத்தை அனைவரும் கண்டு களிக்க வேண்டும். மண்பாண்ட தொழிலை கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் விளக்கிக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் மாணவர்கள், ஆசிரியர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு மண்பாண்டங்கள் செய்வது மற்றும் கலைப் பொருட்களை வடிவமைப்பது குறித்து தெரிந்துகொண்டனர்.
Related Tags :
Next Story