தர்மபுரியில் போலீசார் சார்பில்சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு


தர்மபுரியில் போலீசார் சார்பில்சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
x
தினத்தந்தி 15 May 2023 12:30 AM IST (Updated: 15 May 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

சைபர் கிரைம் குற்றங்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க தர்மபுரி மாவட்ட போலீசார் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் உத்தரவின்பேரில் தர்மபுரி டவுன் பஸ் நிலையத்தில் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் உதயகுமார், ரங்கசாமி ஆகியோர் பஸ் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு சைபர் கிரைம் குற்றங்கள் குறித்தும், சைபர் கிரைம் குற்றங்களில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்வது எப்படி என்பது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. வங்கிக் கணக்கு எண், ரகசிய பின் நம்பர், ஆதார் எண் ஆகியவற்றை முகம் தெரியாத நபர்களிடம் பகிர்ந்து கொள்ள கூடாது. செல்போன் நேரடி அழைப்பு மற்றும் எஸ்.எம்.எஸ். மூலம் ஆசையை தூண்டும் விதமாக லிங்க் இணைப்பை தொடருங்கள் என அழைப்புகளை நிராகரிக்க வேண்டும் என்று போலீசார் கூறினர். இதனையும் மீறி பொதுமக்கள் பணத்தை இழந்தால் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களில் உடனடியாக புகார் தெரிவிக்க வேண்டும் என்று கூறினர்.


Next Story