ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்
நாகர்கோவிலில் ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்
நாகர்கோவில்,
ஆட்டோ மீட்டர் கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டும், மோட்டார் வாகன சட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடாது, ஆட்டோ தொழிலாளிக்கு இ.எஸ்.ஐ. மருத்துவ வசதி ஏற்படுத்த வேண்டும், பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குமரி மாவட்ட ஆட்டோ டிரைவர்கள் சங்கம் (சி.ஐ.டி.யு.) சார்பில் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் உள்ள மாநகராட்சி பூங்கா முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்ட செயலாளர் பொன்.சோபனராஜ் தலைமை தாங்கினார். கண்ணன், சுரேந்திரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் வக்கீல் மரிய ஸ்டீபன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் தங்க மோகனன் மற்றும் நிர்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.