சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவருக்கு 20 ஆண்டு சிறை


சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவருக்கு 20 ஆண்டு சிறை
x

ஆடு மேய்த்து கொண்டிருந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை அளித்து திருவண்ணாமலை போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு அளித்து உள்ளது.

திருவண்ணாமலை

ஆடு மேய்த்து கொண்டிருந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை அளித்து திருவண்ணாமலை போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு அளித்து உள்ளது.

ஆட்டோ டிரைவர்

செய்யாறு தாலுகா குண்ணவாக்கம் குளக்கரை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 34), ஆட்டோ டிரைவர். இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இவர் கடந்த 2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் 17-ந் தேதி அந்த பகுதியில் உள்ள காட்டு பகுதிக்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கு 2 சிறுமிகள் ஆடு மேய்த்து கொண்டிருந்தனர். அங்கிருந்த சுமார் 11 வயதுடைய சிறுமி ஒருவரை சுரேஷ் தனியாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

அந்த சமயத்தில் அவ்வூரில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்று கொண்டிருந்த ஒலிபெருக்கியின் சத்தம் காரணத்தினால் சிறுமியின் அலறல் சத்தம் வெளியே கேட்கவில்லை.

அங்கிருந்த மற்றொரு சிறுமி சுரேசுடன் சென்ற சிறுமியை தேடி சென்றார். அப்போது சுரேஷ் சிறுமியை பலாத்காரம் செய்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் அங்கிருந்து ஓடி ஊருக்குள் சென்று இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் சிறுமியின் தாய் மற்றும் ஊர் பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர். பொதுமக்கள் வருவதை கண்டதும் சுரேஷ் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

20 ஆண்டு சிறை

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் செய்யாறு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சுரேசை கைது செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் இன்று இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி தீர்ப்பு கூறினார். அதில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சுரேசுக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.


Related Tags :
Next Story