விபத்தில் ஆட்டோ டிரைவர் பலி


விபத்தில் ஆட்டோ டிரைவர் பலி
x

நெல்லையில் சாலை தடுப்பில் மோதி ஆட்டோ விபத்துக்குள்ளானதில் டிரைவர் பரிதாபமாக இறந்தார்.

திருநெல்வேலி

நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறையை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (வயது 41). ஆட்டோ டிரைவரான இவர் நேற்று முன்தினம் வண்ணார்பேட்டை வடக்கு பைபாஸ் சாலையில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆட்டோ திடீரென நிலை தடுமாறி சாலையின் நடுவே உள்ள தடுப்பில் மோதி விபத்துக்குள்ளாது. இதில் படுகாயம் அடைந்த ஆனந்தராஜ் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிர் இழந்தார். இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story