ஆஸ்திரேலிய நாட்டு அரிய வகை ஆந்தை மீட்பு


ஆஸ்திரேலிய நாட்டு அரிய வகை ஆந்தை மீட்பு
x

ஆஸ்திரேலிய நாட்டு அரிய வகை ஆந்தை மீட்கப்பட்டது.

புதுக்கோட்டை

வடகாடு பகுதியை சேர்ந்தவர் விவசாயி செல்லபிரபு. இவர் நேற்று காலை தனது தோட்டத்தில் மல்லிகை பூக்களை பறித்து கொண்டு இருந்தார். அப்போது, தோட்டத்தின் அருகே ஏராளமான காகங்கள் கூட்டமாக ஒன்று சேர்ந்து எதையோ ஒன்றை கொத்தி கொண்டு இருந்துள்ளது. இதையடுத்து அவர் அங்கு சென்று பார்த்த போது, பெரிய அளவிலான ஆந்தை இருந்தது. இதனையடுத்து, அந்த ஆந்தையை காகங்களிடம் இருந்து மீட்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இந்த ஆந்தை ஆஸ்திரேலியா நாட்டின் அரிய வகை ஆந்தையான பார்ன் வகையை சேர்ந்தது என்றும், ஆஸ்திரேலியாவில் பரவலாக வாழக்கூடியது என்றும் கூறப்படுகிறது. இந்த ஆந்தையின் வாய், அலகு மற்றும் கால்களை வீட்டினில் கட்டி வைத்தால் அதிர்ஷ்டம் கிடைக்கும் என்ற மூட நம்பிக்கை இந்தியாவில் இருப்பதால், இந்தியாவில் இந்த வகை ஆந்தைகள் வேட்டையாடப்பட்டு ரூ.8 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை விற்பனை ஆவதாக கூறப்படுகிறது.


Next Story