கம்பத்தில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயற்சி:8 கிலோ கஞ்சா பறிமுதல்; பெண்கள் உள்பட 6 பேர் கைது


கம்பத்தில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயற்சி:8 கிலோ கஞ்சா பறிமுதல்; பெண்கள் உள்பட 6 பேர் கைது
x
தினத்தந்தி 22 Jan 2023 12:15 AM IST (Updated: 22 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கம்பத்தில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 8 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் பெண்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

தேனி

கம்பம் மணிகட்டி ஆலமரம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சப்-இன்ஸ்பெக்டர் விஜய்ஆனந்த் தலைமையில் போலீசார் விரைந்து சென்றனர். அப்போது அங்கு 2 பெண்கள் உள்பட 6 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். இதனால் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில் 8 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் விசாரணை நடத்தியதில் அவர்கள் வருசநாடு சீலமுத்தையாபுரம் பகுதியை சேர்ந்த பிரபு (வயது 35), சுமதி (33), மயிலாடும்பாறை காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த யோகராஜன் (35), கம்பம் உலகத்தேவர் தெருவை சேர்ந்த ஜெகன் (23), சுவாமி விவேகானந்தர் தெருவை சேர்ந்த சிவராஜ் (37), மந்தையம்மன் கோவில் தெருவை சேர்ந்த நதியா (33) என்பதும், மோட்டார் சைக்கிளில் கேரளாவிற்கு கஞ்சா கடத்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கஞ்சா, ரூ.74 ஆயிரத்து 500 மற்றும் 2 மோட்டார் சைக்கிள், 6 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story