அண்ணன்-தம்பி தீக்குளிக்க முயற்சி


அண்ணன்-தம்பி தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 27 Sept 2022 12:15 AM IST (Updated: 27 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு அண்ணன்-தம்பி தீக்குளிக்க முயன்றனர். அவர்கள் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தர்மபுரி

தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு அண்ணன்-தம்பி தீக்குளிக்க முயன்றனர். அவர்கள் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அண்ணன்-தம்பி

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள பி.அக்ராஹாரம் காலனி பகுதியை சேர்ந்த மதன்குமார் மற்றும் அவரது தம்பி கோவிந்தராஜ் ஆகிய 2 பேரும் நேற்று தர்மபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் தர்மபுரி- சேலம் பைபாஸ் சாலையில் உடல்களில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது கலெக்டர் அலுவலகம் முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தீக்குளிக்கும் முயற்சியை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்த அழைத்து சென்றனர். ஆனால் அண்ணன்-தம்பி இருவரும் ஒருவருக்கொருவர் கைகளை கட்டிக்கொண்டு கலெக்டர் அலுவலகம் முன்புள்ள சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் அவர்களை குண்டுகட்டாக தூக்க முயன்றனர். அவர்கள் 2 பேரும் ஒருவருக்கொருவர் விட்டு கொடுக்காமல் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

நடவடிக்கை எடுக்கவில்லை

அப்போது அவர்கள் கூறுகையில், கடந்த ஓராண்டுக்கு முன்பு காணாமல் போன தங்களது நான்கு சக்கர சரக்கு வாகனத்தை கண்டுபிடித்து தரக்கோரி பென்னாகரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விட்டது. பல்வேறு இடங்களில் புகார் அளித்தும் எந்த பயனும் இல்லை. எனவே மாவட்ட நிர்வாகம் காணாமல் போன வாகனத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

கலெக்டர் நேரில் வந்து பேசினால் தான் போராட்டத்தை விடுவோம் என்று கூறி தரையில் படுத்து போராட்டம் நடத்தினார். நீண்ட நேர போராட்டத்துக்கு பின் அவர்களை போலீசார் தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலக பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story