காவலாளி மீது தாக்குதல்


காவலாளி மீது தாக்குதல்
x

காவலாளியை தாக்கியவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருநெல்வேலி

பாளையங்கோட்டை அருகே பொய்லான் நகரை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 51). இவர் பாளையங்கோட்டை சித்தா ஆஸ்பத்திரியில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் சுப்பையா. சம்பவத்தன்று பாஸ்கர் தனது வீட்டுக்கு அருகே நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த சுப்பையா, பாஸ்கரிடம் திடீரென தகராறில் ஈடுபட்டு அவரை செங்கலால் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் காயம் அடைந்த பாஸ்கர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் பாளையங்கோட்டை தாலுகா போலீசார் சுப்பையா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story