உத்தமபாளையத்தில்வாலிபரை குத்திக்கொன்ற 4 பேர் ைகது :பரபரப்பு வாக்குமூலம்
உத்தமபாளையத்தில் வாலிபரை குத்திக்கொன்ற 4 பேரை ேபாலீசார் கைது செய்தனர். அவர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர்.
கிணற்றில் பிணம்
தேனி மாவட்டம், உத்தமபாளையம் ஆர்.சி.தெருவை சேர்ந்தவர் கிருத்திக் செல்வா (வயது 20). கூலித்தொழிலாளி. கடந்த 24-ந்தேதி இரவு இவர், வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன்பின்னா் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது தாய் செல்வி உத்தமபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு இடங்களில் அவரை தேடினர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் கிருத்திக் செல்வா கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டார். பின்னர் இன்ஸ்பெக்டர் சிலை மணி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் அவரது நண்பர்கள் 6 பேர் சோ்ந்்து கிருத்திக் செல்வாவை கத்தியால் குத்தி உடலில் கல்லை கட்டி கிணற்றில் வீசியது தெரியவந்தது.
விசாரணை
இதையடுத்து கிருத்திக் செல்வாவின் நெருங்கிய நண்பர்களான உத்தமபாளையம் ஆர்.சி. மேலகிணறு தாமஸ் காலனியை சேர்ந்த பிரின்ஸ் (22), விக்கி என்ற சுதர்சன் (20), வினோத் (26), அதே ஊரை சேர்ந்த கோபிகிருஷ்ணா (19) ஆகிய 4 பேரை பிடித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில், கிருத்திக் செல்வாவை கொலை செய்ததை அவர்கள் ஒப்பு கொண்டனர். பின்னர் அவர்களை போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து அவர்கள் போலீசிடம் அளித்த வாக்குமூலத்தில்,
கிருத்திக் செல்வாவிற்கும், எங்களுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. கடந்த 2020-ம் ஆண்டு ஏற்பட்ட தகராறில் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டோம். இந்தநிலையில் கடந்த 24-ந்தேதி 6 பேர் கிருத்திக் செல்வாவுடன் சோ்ந்து மது அருந்தினோம். அப்ேபாது தகராறு ஏற்பட்டது. இதையடுத்து சமாதானம் பேசுவதுபோல் கிருத்திக் செல்வாவை, அழைத்து சென்றோம்.
கத்தியால் குத்தி கொலை
பின்னர் அங்கு வைத்து கத்தியால் குத்தி ெகான்றுவிட்டு அவரது உடலில் கல்லை கட்டி தாமஸ் காலனி அருகில் உள்ள கிணற்றில் தூக்கி வீசிவிட்டு சென்றுவிட்டோம். மறுநாள் காலையில் ஒன்றும் தெரியாதது போல் நாங்களும் சேர்ந்து கிருத்திக் செல்வாவை தேடினோம். ஆனால் போலீசார் விசாரணையில் சிக்கி கொண்டோம். இவ்வாறு அவர்கள் கூறியிருந்தனர்.
மேலும் இந்த கொலையில் தொடர்புடைய 2 பேரை போலீசாரை தேடி வருகின்றனர். நண்பர்களே சேர்ந்து கத்தியால் குத்தி வாலிபரை கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. கிருத்திக் செல்வா திருமணமாகாதவர் என்பது குறிப்பிடத்தக்கது.