தென்காசி, சிவகிரியில் பரவலாக மழை


தென்காசி, சிவகிரியில் பரவலாக மழை
x
தினத்தந்தி 17 March 2023 10:45 AM IST (Updated: 17 March 2023 10:45 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி, சிவகிரி பகுதியில் பரவலாக மழை பெய்தது.

தென்காசி

தென்காசியில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் அடித்தது. நேற்று காலையிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மாலை 6 மணி அளவில் திடீரென மழை பெய்தது. பரவலாக பெய்த இந்த மழை சுமார் 15 நிமிடம் நீடித்தது.

இதேபோல் சிவகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலையில் பரவலாக மழை பெய்தது. இதனால் அங்குள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.



Next Story