எட்டயபுரம் சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை


எட்டயபுரம் சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை
x
தினத்தந்தி 23 April 2023 12:15 AM IST (Updated: 23 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு எட்டயபுரம் ஆட்டுச் சந்தையில் நேற்று ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு எட்டயபுரம் ஆட்டுச் சந்தையில் நேற்று ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.

ஆட்டுச் சந்தை

தென் மாவட்டங்களில் நடைபெறும் ஆட்டுச் சந்தைகளில் எட்டயபுரம் வாராந்திர ஆட்டுச்சந்தை மிகவும் புகழ் வாய்ந்த சந்தையாகும். இங்கு மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வந்து ஆடுகள் வாங்கி செல்வது வழக்கமாகும்.

வழக்கமாக சனிக்கிழமை நடைபெறும் ஆட்டுசந்தையில் சுமார் 2 கோடி ரூபாய் வரை வியாபாரம் நடைபெறும். தீபாவளி, பொங்கல், ரம்ஜான், பக்ரீத், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை காலங்களில் ஆடுகள் விற்பனை அதிகமாக நடைபெறுவது வழக்கம்.

ரூ.3 கோடி

நேற்று ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு எட்டயபுரம் சந்தைக்கு வெள்ளிக்கிழமை மதியம் முதலே ஏராளமான ஆடுகள் விற்பனைக்கு வந்தது.

நேற்று நடந்த ஆட்டுச் சந்தையில் சுமார் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


Next Story